யதார்த்தம் - வ.இரா. தமிழ் நேசன்

யதார்த்தம் – வ.இரா. தமிழ் நேசன்

வாழ்க்கை மிகவும் அழகானது; நமக்கு தான் இரசிக்க முடியவில்லை.இரசிக்க தெரியாமலில்லை; தெரிந்தும் ஏனோ இரசிப்பதில்லை.
நம்மிடம் இருக்கின்ற ஒன்றை கவனப்படுத்தாமல் ; மற்றவர்களிடம் இருப்பதை ஆதங்கத்தோடு பார்க்கிறோம்; கரடி பொம்மையை வைத்திருக்கும் குழந்தை , அல்சேசன் நாய் பொம்மைக்கு ஆசைப்படுவதைப் போல..
ஆசைப்படுவதில் நாம் அனைவரும்
குழந்தைகள் தான்.
வாழ்க்கையில் நம் வழியில் வாழ்வதை விட
அதன் வழியில் வாழ்வதில் ஒரு ஆனந்தம் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் நம்மில் எத்தனை பேர் வாழ்க்கையை அதன் வழியில் வாழ்கிறோம்.
ஒன்றை இன்னொன்றாய் பாவித்து இருக்கின்ற ஒன்றையும் தவறவிடுகிறோம். தாம் தவற விட்டதை நம்மில் பலர் உணர்வதே யில்லை. உணர்கின்ற ஒரு சிலரும் இழந்ததை பற்றிய சஞ்சலத்திலேயே இருக்கின்ற இன்னொன்றையும்  தவறவிடுகிறோம்.
எதை நாம் நம்மளவில் உண்மை என்று நினைக்கிறோமோ , அது வேறொருவருக்கு உண்மையாய் தெரிவதில்லை. வேறொருவருக்கு உண்மையாய் தெரிவது நமக்கு உண்மையாய் தெரிவதில்லை. ஆக உண்மை என்பது அவரவர் கைமண் அளவே
இதில் மற்றவரை தூற்றுவதும் போற்றுவதும் விரலிடுக்கில் வழியும் மணல் தானோ?
அவரவர் ஆசை அவரவர் மட்டில்; அள்ளுவதும், கொள்வதும் அவரவர் கையளவே.
யதார்த்தம் எங்கும்; எவரிடமும் இல்லையென்பதே யதார்த்தமாக இருக்கிறது.
எதை ப்ராமாண்டம் என நினைக்கிறோமோ அது ப்ராமாண்டமில்லை என உணரத் தொடங்கும் தருவாயில் நரைகூடி கிழப் பருவமெய்தி……