வெளிச்சத்தின் தேடலில் இருள் - வ.இரா.தமிழ் நேசன்

வெளிச்சத்தின் தேடலில் இருள் – வ.இரா.தமிழ் நேசன்

எதிரேவரும் எவரிடமும்
சிறு புன்னகையை கூட
பெறமுடியாத அல்லது
தரமுடியாதவர்கள்
சாதிக்கப் போவதென்ன?
பழைய புன்னகையின்
கசங்கல் பிரதியாய்
இருந்து விட்டுப் போ-என
காலம் சபித்து விட்டதோ?
எதிர்பார்ப்புகள் எப்போதும்
ஏமாற்றத்தையே
விலையாய் கேட்கிறது.
உலகின் மொத்த வெளிச்சமும்
தன்மீது பரவ
பேராவல் கொள்கிறாய்;
வெளியே  இருள்
பெருங்கடலென பரவுகிறது!