கருணையின் நிழல்    - மனுஷி

கருணையின் நிழல் – மனுஷி

எனது நாட்களின் வாசலில்

பேரன்பைச் சுமந்த தேவதைகள்
வந்து கொண்டே இருக்கிறார்கள்.
ஒவ்வொரு அதிகாலையிலும்
பூக்கள்
மலர்ந்து கொண்டே இருக்கின்றன.
செடியில் இருந்து
சிறிய உயிரென
ஒரு துளிர் முளைவிடுகிறது.
வனமெங்கும் அலைந்து திரியும் பறவைகள்
உணவு கேட்டு வந்து நிற்கின்றன.
ஜன்னலோரத்தில் அணில் ஒன்று
முக காட்டிவிட்டுப் போகிறது.
எனது முகத்தினருகே தேன்சிட்டு
காற்றின் பாடலைப் பாடிவிட்டுச் செல்கிறது.
எனது வாழ்க்கையின் மீது
கருணை
நிழலென பரவிக் கிடக்கிறது.
இதயம் உடையும் தருணங்களில்
தேற்றிக் கொள்ள
உனது ஒற்றைச் சொல்லைப்
பற்றிக் கொண்டேன் மாயா.
– மனுஷி