தனிமையின் பெருவெளி - வ.இரா.தமிழ்நேசன்

தனிமையின் பெருவெளி – வ.இரா.தமிழ்நேசன்

குயிலின் பாடல் கூட

தனிமையின்
பேரழுகையாகிப் போன
ஒருத்திக்கு
தருவதற்கு
முத்தத்தைத்  தவிர
ஒன்றுமில்லை
என்னிடம்.
அவள்
புல்லாங்குழலெடுத்து
யாசிக்கிறாள் ;
நானங்கில்லாத துயர்த்தை
தனிமையின் குரலெடுத்து
வாசிக்கிறாள்.
ஏகாந்தத்தின் பெருவெளியில்
தேடுகிறாள் — தன்
இழப்பின் பெருவலியை!
கொஞ்சம், கொஞ்சமாக
அந்த சப்தம் குறைந்து
கொண்டே போகிறது;
அது நின்று விடும்
அத் தருணத்தில்
இரட்சகனைப் போல் வந்து
முத்தத்தால் உயிர்ப்பிக்கிறேன்
தனிமையில் திளைத்திருந்த
பெருவெளியெங்கும்
பூக்கள் பூத்துக் குலுங்கின்றன
பறவைகள் சிறகசைக்கின்றன.