தேவதை  -  மனுஷி

தேவதை – மனுஷி

ஒரு மலரைக் கையில் ஏந்துவது போல
அவள் முகத்தைக் கையில் ஏந்தினேன்.
குழந்தையை முத்தமிடுவது போல
அவளை முத்தமிட்டேன்.
துயரங்களின் நிழல் கவிந்த
அவளது நாட்களின் முன்
சிறு மெழுகின் ஒளியைப் படர விட்டேன்.
அசையும் மரக்கிளைகளின் மீதமர்ந்து
அன்பின் பாடலைப் பாடுகிறது குயில்.
தனிமையின் பேரழுகை அது என்றபடி
தேம்பியழுகிறாள்.
மகிழ்ச்சியின் தேசத்தில்
அவளொரு தேவதை என்பதை
அவளுக்கு நினைவூட்ட
மீண்டும் ஒருமுறை அழுந்த முத்தமிட்டேன்.
அவளது தோட்டத்தில்
நட்சத்திரங்கள் பூக்கத் தொடங்கிவிட்டன.
– மனுஷி