தமிழகத்தின் மகள்

தமிழகத்தின் மகள்

படிப்பை தவமாக செய்துவிட்டு
உன் சாவை
எங்களுக்கு வரமாக்கிவிட்டாயே!
தீயின் நாவுகளுக்கு
உன் உடலை
திண்ணக் கொடுக்கத்தான்
மருத்துவர் ஆக வேண்டுமென
ஆசைப்பட்டாயோ?
உன் உயிரை துறந்து
எங்களுக்கு இனமானம்
ஊட்டினாயோ?
மரணத்தின் வாசலை
திறக்கவா
நீட்டுக்கு விலக்கு கேட்டு
நீதிமன்ற கதவை தட்டினாய்.
ஏழை சொல்
அம்பலம் ஏறாததால்
பாடையில் ஏறி
பயணம் செய்தாயோ?
கோடான கோடி
கைகள் உனக்கு
உதவ காத்திருந்தும்
தமிழினத்திற்கே
உயிரை கொடையாக
அளித்தாயோ?
தூர தேசத்திற்கு
செல்வதென்றால்
போய் வா மகளே என
வழியனுப்பி வைக்கலாம்
நீயோ
திரும்ப முடியாத
இடத்திற்கல்லவா
சென்றுவிட்டாய்.
உன் சிதைக்கு மூட்டிய
தீயில் _  எம்  நெஞ்சுக்குள்
கனலாக
கரு கொண்டாய்
தங்க மகளே!