தூக்கம் மறந்து இரவுகள்   - சக்தி ஜோதி

தூக்கம் மறந்து இரவுகள் – சக்தி ஜோதி

நம்முடைய பிரிவினால்
ஒப்பனை கலைந்த
இக்காலத்தின் இரவுகள்
தூக்கமின்மையினால்
நீண்டிருக்கிறது
என்னுடைய வானத்தில்
காற்று வீசுவதில்லை
எனது நிலமோ
நீர் இன்றி வறண்டிருக்கிறது
எனது தணலை
தணியவிடாது
காத்துநிற்கிறேன்
இம்மழைகாலத் தொடக்கத்தில்
நீ
வந்துவிடுவாய்
தூக்கம்
தொலையும் இரவுகள்
மீளவும் தொடர்ந்திடும்
இம்முறை
உயிர்த்து தளும்பும்
புலனைந்தும்
குழைந்து
இளக
இப்புலம் உனக்கேயான
இரகசிய மலர்களை
கையளிக்கத் தொடங்கும்.
        — சக்தி ஜோதி