பல சொல் கடந்நவள்   - சகதி ஜோதி

பல சொல் கடந்நவள் – சகதி ஜோதி

ஒருத்தி
தன்னுடைய மணமுறிவின்
கசப்பூறிய வார்த்தைகளோடு
என்னிடம் வந்தாள்
வேறு ஒருத்தி
தன்னுடைய
தற்கொலை ஏன்
தவிர்க்கப்படமுடியாத ஒன்று
என்பதற்கான காரணத்தை
கண்ணீரில் நனைந்த சொற்களாக்கினாள்
இன்னும் ஒருத்தி
தான்
கொலை செய்யவிரும்புகிற
சிலரைப்பற்றிய
சித்திரத்தை
சிறுசிறு வரிகளாக்கி
தயக்கமேதுமின்றித் தந்தாள்
இத்தனையையும்
பேறென பெற்று இருத்திக்கொண்ட
வேறு ஒருத்தி சொன்னாள்
எழுத்துக்களை கோர்த்து
ஏமப் புணையாக்கி வைத்து
காத்திருக்கிறேன்
எல்லாவற்றையும்  கடந்துசெல்ல.
     —சகதி ஜோதி