கதவுகள்

கதவுகள்

யாரா ஒருவர்
கதவுகளை அறைந்து
மூடுகின்றார் – பாவம்
கதவுகள் அறிவதில்லை;
திறவுகோல் என்னிடம்
இருக்கும் இரகசியத்தை!

கதவுகள்
மூடியிருப்பதுமட்டுமே
தன்  கடமையென
நினைக்கிறது போலும்!
திறவுகோல்களை அறியாத
கதவுகள் ஒரு போதும்
கதவுகள் என அறியப்படுவதில்லை!

ஒரு கதவு மூடினால்
மறு கதவு திறக்கும் என்பர்
இது – மறு கண்ணத்தை
காட்டுவதைப் போலல்ல!

என்னிடம் திறவுகோல் இருக்கிறது.
எனக்கான கதவுகளை
நானே தயாரித்துக் கொள்வேன்
ஏனெனில்
நானே மரம்,
நானே உளி,
நானே தச்சன்!

   வ.இரா. தமிழ் நேசன்.