வாழும் வரலாறு

வாழும் வரலாறு

சமூக நீதிக்கு மூச்சு திணறும் பொழுதெல்லாம் கோபாலபுரம் வந்து
தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்ளும்!

உழைப்புக்கு கொஞ்சம்
வியர்க்கும் பொழுதெல்லாம்
கோபாலபுர  வாசலில்
இளைப்பாறும்!

தோல்விகள்
துவண்டுவிடகிற பொழுதெல்லாம்
மு.க விடம் தான்
வெற்றியின் சூட்சுமத்தை
பாடமாக கற்றுக் கொள்கிறது!

செவ்விதழ்கள்
புன்னகையை புறக்கணித்தாலும்
உன் சிரிப்பில் சொக்கிப் போய்
கோபாலபுரத்தில் குடிகொள்கிறது !

பக்கத்து வீட்டு
செடிகள் கூட  உன் வீட்டு
தாழ்வாரத்தில் பூ பூக்க
ஆசைப்படுகிறது!

உன்னை காணும் பொழுத்தெல்லாம்
வரலாறு தன்னை ஒரு முறை
திரும்பி வாசித்துக் கொள்கிறது!