கலைஞர்-94

கலைஞர்-94

வழிதவறிய செம்மறிஆடுகளாய்
அலைந்து திரிகிறோம்
எங்கள் மேய்ப்பனைத் தேடி.

மேய்ப்பனோ
கதவுகளை மூடிக் கொண்டு
மெளன விரதம் காக்கிறார்.

அந்த மெளனம்
இன்றில்லையெனினும்
நாளை வெடித்து கிளம்பும்
பாறைகள் பிளக்க
எதிரிகள் நடுநடுங்க
துரோகிகள் ஓடிஒழிய.

“என் உயிரினும் மேலான
அன்பு உடன் பிறப்பேயென”
கானகமும், விண்ணகமும் அதிர
கரகரத்த குரலெடுத்து  கூவும்