அப்பாக்கள்!

அப்பாக்கள்!

அப்பா
கருவறை இல்லாத
தாய் !
தாய் இரத்தத்தை
பாலாக்கிறாள்;
அப்பாக்கள்
வியர்வையாக்குகின்றனர்!

மகன்(ள்)களின்
இரண்டாம் கருவறை
அப்பாக்களின் மனசு!

தாயின் மடியையும்
தந்தையின் தோளையும்
உணர்ந்த பிள்ளைகள்
பாக்கியவான்கள்!

ஒவ்வொரு பிள்ளையும்
அப்பாவாக ஆகும்போதுதான்
தெரிகிறது
“அப்பா” என்பது அப்பாவல்ல
அவர் வாழ்க்கைப் பாடமென!

பெயரப் பிள்ளைகளை
கொஞ்சுவதில் தெரிகிறது
தன் பிள்ளைகளை
கொஞ்சாமல் போனதன்
வலி!

எல்லா அப்பாக்களும்
வாழ்வதேயில்லை
தன் வாழ்க்கையை !

– வ.இரா. தமிழ் நேசன்.