காலூன்றி.... - வ. இரா.தமிழ் நேசன்.

காலூன்றி…. – வ. இரா.தமிழ் நேசன்.

 

என்னுள்  கிளைவிரித்த  மரத்தின்
ஒற்றை கிளை பற்றி
ஆடுகிறேன் ஊஞ்சலென!
என்னுள் விரிந்த
வானம் தொட
மேகங்களை கிழித்து
பறக்கிறேன் பறவையென!
என்னுள் அலையெழுப்பிய
கடலின்
ஆழம் தேடுகிறேன்
மீனென!
கற்பனை கலைத்து
மண்ணில் காலான்றி
எழுகிறேன்  வெறும்
மனிதனென!