தூரிகையில் சிதறும் ஓவியம் - கவிதா லட்சுமி

தூரிகையில் சிதறும் ஓவியம் – கவிதா லட்சுமி

மிருகத்தைப் போலவோ கடவுளைப் போலவோ
வெறும் கோடுகளாகவோ அல்லது ஒரு சடலமாகவோ
எனது உருவத்தை நான் வரைந்தாகவேண்டும்
பிக்காசோவின் முக்கோணச் சில்லுகளாய்
சிதறிக்கிடக்கிறது என் பிம்பம்
வான்கோ ஓவியங்களின் மனக்குழப்பங்கள்
வளைந்த கோடுகளாகி
கீறப்படுகிறதென் உருமீது
இரவிவர்மாவின் அலகிலா நிறங்களை அள்ளி
மேனியில் அப்பிக்கிடக்கவே விரும்புகிறது உடல்
எனினும்
வியத்தகு ஒளி பூசிய கரவோஜியோ ஓவியங்கள்
வெளிச்சக் கதிர்களால் ஊடுருவி
என் இருண்ட மறுகரையின் தெற்குமூலையில்
இறந்த சடலமொன்றின் வாசத்தைக்  கண்டடைந்துவிடுகிறது
இவையனைத்தும் தாண்டி
வர்ணங்களை உடைத்தெறியும் கண்களால்
பெயரற்ற குகையோவியங்களைப் போலாவது
எனது உருவத்தை நானே வரைந்தாகவேண்டும்
சகா