கலைக்கப்படாத தவம் - கவிதா லட்சுமி

கலைக்கப்படாத தவம் – கவிதா லட்சுமி

கலைக்கப்படாத தவம்
ஆட்கொள் என்ற மந்திரம்
சுருண்டுகிடக்கும் அமைதி
தனிமையின் கருவறை
எந்த அறிகுறியும் இல்லாமல்
வருடக்கணக்கில் காத்திருப்பு
சுவாசிக்க முடிகிறது
உணவும் கிடைக்கிறது
என்பதற்கான வாழ்தல்
கலைக்கப்படாத என் தவத்தில்
கடவுள் வரப்போவதில்லை
தெரிந்த பின்தான்
என் மனதின் அமைதியில்
குவியல் செய்து புதைந்துகிடக்கிறேன்
பொந்துக்குள் தெரியும்
சின்ன உலகத்தில்
மீளப்பிறப்பதில் சம்மதமில்லை!
ஆத்மார்த்தமாய் ஆட்கொள்
என்ற மந்திரத்தின் பயன்
கிடைக்கப் பெறாதெனின்