இனி என்ன இருக்கிறது  இழப்பதற்கு!

இனி என்ன இருக்கிறது இழப்பதற்கு!

தொலைக்காட்சி வந்தது உறவுகள் தூரமாயினர்;
முகநூல் வந்தது
நண்பர்களின் முகங்களை மறந்தோம்;
பகிரி வந்தது
மனைவி, மக்களின்
அருகாமையை இழந்தோம்;
இனி என்ன இருக்கிறது
நம்மிடம் இழப்பதற்கு!
தொடுதிரையில்
தொலைத்துக் கொண்டிருக்கிறோம் வாழ்க்கையை! – ஆயினும் நண்பர்களே திண்ணைப் பேச்சுகளின் மறுவடிவம் தான் முகநூலும், பகிரியும்;
நம்பிக்கை இழக்க அவசியமில்லை; அவ்வப்போது பேசுவோம்
முகம் பார்த்தும்.